அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை.. – வானிலை மையம் தகவல்

tamilnadu thunder rainupdate
By Irumporai Apr 09, 2022 12:07 PM GMT
Report

அடுத்த 3 மணிநேரத்தில் இந்தந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்.

வங்கக்கடலின் தென்மேற்கு பகுதி மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது.

இன்றும், நாளையும் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில்.

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்ளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் திடீர் தகவலை வெளியிட்டுள்ளது.