நடிகர் அபிநய் காலமானார் - திரையுலகினர் இரங்கல்!
நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார்.
நடிகர் அபிநய் மறைவு
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் அபிநய். மலையாளம் உள்ளிட்ட திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார்.

15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் 44 வயதாகும் அபிநய் உடல் நலம் பாதிக்கப்பட்டு படங்கள் வாய்ப்பு இல்லாததால் வருமானமின்றி வறுமையில் சிக்கினார்.
திரையுலகில் சோகம்
கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலமும் குன்றி, வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அவருக்கு நடிகர் தனுஷ், அபிநய்க்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. அதேபோல் நடிகர் KPY பாலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் இன்று அதிகாலை நடிகர் அபிநய் காலமானார்.அவரின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது