'அண்ணாமலை தான் முதலமைச்சர்' - ரஜினி சொன்ன ரகசியத்தை உடைத்த துக்ளக் குருமூர்த்தி!
அண்ணாமலை தான் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆண்டு விழா
துக்ளக் பத்திரிகையின் 54-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது விழாவுக்கு தலைமை வகித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது "அண்ணாமலையை பற்றி இந்த நேரத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும். அண்ணாமலையின் ஐபிஎஸ் அனுபவம் என்பது பன்முகத்தன்மை வாய்ந்தது.
திடீர்னு ஒரு விஷயம் நினைவுக்கு வந்துருச்சு. ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பதில் தீவிரமாக இருந்த காலகட்டம் அது. அப்போது ரஜினிகாந்த் சொன்னார். சார்.. நான் ஜெயிச்சாலும் நான் முதலமைச்சராக வர மாட்டேன் என கூறினார்.
முதலமைச்சர்..?
எனக்கு ஒன்னும் புரியல. நீங்க முதல்வர் ஆகாம, வேற யாரை ஆக்குவீங்கனு கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். சார், உங்களுக்கு அண்ணாமலைனு ஒருத்தர் இருக்காரு தெரியுமா..
கர்நாடகாவில் ஐபிஎஸ்ஸா இருக்காரு. நல்லா பண்ணிக்கிட்டு இருக்காரு. அவர்தான் முதலமைச்சராக வர சரியான ஆள் என ரஜினி அன்றைக்கு என்னிடம் கூறினார். அப்போது அண்ணாமலையை பற்றி நான் பேப்பரில் தான் படித்திருக்கிறேன்.
இந்த விஷயம் இப்போது வரை அண்ணாமலைக்கு தெரியுமா தெரியாதானு எனக்கு தெரியல. அந்த அளவுக்கு ஐபிஎஸ் ஆக இருக்கும் போதே தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை.