திருத்துறைப்பூண்டி அருகே கனமழையால் இடிந்து விழுந்த வீடு - 2 படு படுகாயம்...!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, திருத்துறைப்பூண்டி அருகே வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மீண்டும் மழை
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கையில், இன்று தமிழகத்தின் தெற்கு, மேற்கு உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
கனமழையால் இடிந்து விழுந்த வீடு
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கீழத்தெரு கிராமத்தில் இரவு பெய்த மழையில், ஒரு வீட்டின் உள்புறத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜகுமாரி (50), அவரது மகன் வீரச்செல்வம் (24 ) பலத்த காயம் அடைந்தனர். இவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.