உக்ரைனுக்கு ஆதரவு - மூன்று பேருக்கு தூக்கு தண்டனை!

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sumathi Jun 10, 2022 06:07 PM GMT
Report

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்டதாக கூறி 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போர்

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த போரின் விளைவாக இருதரப்பிலும் பல்லாயிரகணக்கில் உயிர் சேதம், பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவு - மூன்று பேருக்கு தூக்கு தண்டனை! | Three Who Fought Against Russia In Ukraine War

இருப்பினும் ரஷ்யா- உக்ரைன் போர் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனிடையே இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 மரண தண்டனை

பிரிட்டனைச் சேர்ந்த இருவர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என் மூன்று பேருக்கு, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவு - மூன்று பேருக்கு தூக்கு தண்டனை! | Three Who Fought Against Russia In Ukraine War

கூலிப்படை நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த மூன்று பேரும் கூலிப்படையினர் எனவும், போர்க் கைதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்றும் பிரிவினைவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.