தமிழர்கள் சுட்டுக்கொலை: பிரேதபரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் மூன்று தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்கள் சுட்டுக்கொலை
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் காவேரி வனப்பகுதிக்கு உட்பட்ட சாக்கியா வனப்பகுதியில் கடந்த 15ம் தேதி வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பில் சாம்ராஜ்நகர் மாவட்ட உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேதபரிசோதனை அறிக்கை
சமீபத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், மூவரின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் மிக அருகில் இருந்து சுடப்பட்டவை என்றும், உடலில் உள்காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் மூன்று பேரின் உடல்களிலும் 8.5 செ.மீ அகலத்தில், 6 செ.மீ ஆழத்துக்கு காயங்கள் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.