உயிர் காக்கும் மருந்திற்கு மூன்று விலைகள், இது அநியாயம் - கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!

covid19 medicine tamilnadu mkstalin threeprices
By Irumporai Apr 28, 2021 05:49 AM GMT
Report

திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மக்கள் அனைவரும் தங்கள் உடல்நலத்தை பாதுகாத்து நோய் வராமல் தடுக்க வேண்டிய காலம் . எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மேலும், முதல் மற்றும் இரண்டாவது பரவல் இடையே மத்திய மாநில அரசுகள் எந்த தற்காப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதன் விளைவுதான் இப்போது நாம் பார்த்து வருகிறோம் என கூறியுள்ள மு.க ஸ்டாலின்.

கொரோனா தடுப்பூசிகளின் விலையை உயர்த்தி இருப்பது அநியாயம் என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை வைத்து நடந்த கொள்ளத்தான் இந்த வேதனையான நேரத்தில் மேலும் துயரமான ஒன்று. மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்பது அநியாயத்துக்கு அநியாயம் என குற்றசாட்டினார்.

உயிர் அனைவர்க்கும் பொதுவானது தானே, ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே மொழி என்று பேசும் பாஜக ஆட்சியில் உயிர் காக்கும் மருந்திற்கு மூன்று விலைகள் என விமர்சித்தார்.

மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும் என கூறியுள்ளார்.