விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு - போலீசார் வழக்கு பதிவு..!
மதுரையில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழந்த வழக்கில் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று இரவு கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சரணவணன்,லட்சுமணன்,சிவக்குமார் உள்ளிட்ட மூவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
இதையடுத்த ஒபந்த நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் மீது எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான விகேஜி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் ஆனந்த்,மேலும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த ரமேஷ்,லோகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் தொழிலாளர்களை பணி செய்ய வைத்தது,பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ய வைத்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.