மொத்தமாக மூன்று நாள், மூன்று நாடுகள் : ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி பயணம் 8 உலக தலைவர்களுடன் சந்திப்பு

Narendra Modi
By Irumporai May 02, 2022 03:18 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து ஜெர்மனி புறப்பட்டு சென்றுள்ளார்.மேலும்,மே 4 ஆம் தேதி வரையிலான இந்த பயணத்தில் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்த வருடத்தில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஜெர்மன் பயணம்: அதன்படி,ஜெமனியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

குறிப்பாக,பிரதமரின் ஜெர்மனி பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார விஷயங்களில் உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் ஸ்கோல்ஸ் ,இந்தியா-ஜெர்மனி இடையேயான அரசாங்க ஆலோசனைகளின் (ஐஜிசி) 6-வது பதிப்பிற்கு இணைத் தலைவராக இருப்பார்கள்.மேலும்,டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனின் அழைப்பின் பேரில் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி கோபன்ஹேகனுக்கு புறப்படுகிறார்.

பிரதமர் தனது டென்மார்க் பயணத்தில் அந்நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்த பிறகு டென்மார்க்கில் உள்ள இந்திய சமூகத்தினரை சந்தித்து பேசுவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும்,டென்மார்க் நடத்தும் 2 வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கிறார்.

இமானுவேல் மாக்ரோன்-பிரதமர் மோடி சந்திப்பு: இறுதியாக,மே 4 ஆம் தேதி பிற்பகல் பிரதமர் இந்தியா திரும்பும் பயணத்தில்,பாரிஸில் சிறிது நேரம் செலவிட்டு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ,உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடக்கும் சூழலில், பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்களுக்கு ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செல்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய மூன்று நாடுகளில் மேற்கொள்ளும் பயணத்தின்போது, 7 நாடுகளை சேர்ந்த 8 தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.