#LIVE ஜனாதிபதி தேர்தல்.. இலங்கை நாடாளுமன்றத்தில் மூவர் பேர் அறிவிப்பு!
இலங்கையில் பொருளாதாரம் வலுவிலந்ததால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி?
இதனால் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சே, உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டார். முதலில் மாலத்தீவுக்கும் தற்போது சிங்கப்பூரிலும் கோத்தபாய ராஜபக்சே பதுங்கி உள்ளார்.
சிங்கப்பூர் சென்ற கோத்தபாய ராஜபக்சே, அங்கிருந்து தமது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். தாம் பதவியேற்ற உடன் இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்தினார் ரணில் விக்கிரமசிங்கே.
நாடாளுமன்ற உறுப்பினர்
இந்நிலையில், இன்று ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ நாணயக்கார அதனை உறுதிப்படுத்தினார்.