வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
Stalin
TN Assembly
By Fathima
மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார்.மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் ரத்துசெய்யப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
இந்த நிலையில், இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.