கேரளா செல்லும் பிரதமர் - பகீர் கிளப்பிய கொலை மிரட்டல் கடிதம்
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாஜக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி இரு நாள் பயணமாக பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க நாளை கேரளா செல்கிறார். இந்நிலையில், அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்துக்கு கடந்தவாரம் மலையாளத்தில் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

அந்த கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மிரட்டல் கடிதம் மற்றும் உளவுத்துறை தகவல்கள் ஊடகங்களில் கசிந்தது எப்படி என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை மிரட்டல்
தொடர்ந்து, உளவுத்துறை தகவல்கள், பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகள் குறித்த தகவல்கள் எப்படி ஊடகங்களில் கசிந்தது என்பது குறித்து மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து கொச்சியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.