போலீசுக்கே கொலை மிரட்டல் விடுத்த ரவுடி - குண்டுக்கட்டாக தட்டித்தூக்கிய பரபரப்பு சம்பவம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அர்ஜுனன்.
இவர் கடந்த 19ம் தேதி ரவுடி செந்தில் என்பவருக்கு போன் செய்து விசாரணை வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது, எதற்கு என்னை கூப்பிடுகிறீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் பெரிய ரவுடி. சும்மா.. சும்மா.. விசாரணைக்கு அழைத்தீங்கன்னா கொலை செய்து விடுவேன் என்று தகாத வார்த்தையால் பேசி, அர்ஜூனனுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.
இதனையடுத்து, அர்ஜூன் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி செந்திலை தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த செந்தில் சீர்காழியிலிருந்து தப்பிச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்தார். அப்போது, போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கொலை மிரட்டல் விடுத்த செந்தில் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.