ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்னும் செய்ய முடியாது - சி.வி.சண்முகம் ஆவேசம் !
ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம். நிழல் போல் இருந்தவர்களால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என விழுப்புரத்தில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக 50 - வது ஆண்டு பொன்விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ,ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்றும் அமமுகவைக் காப்பாற்ற முடியாத சசிகலா, அதிமுகவை காப்பாற்ற போகிறாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், :
அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை.
பொதுச்செயலாளர் என்று கூறுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. மேலும், சிறையில் இருந்து வந்து 8 மாதத்திற்கு பிறகு ஜெயலலிதா நினைவிடம் செல்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது