சிறு தவறு நடந்தாலும் சும்மா விட மாட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

DMK Thoothukudi CMMKStalin MKStalinSpeech
By Thahir Mar 06, 2022 04:04 PM GMT
Report

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

சிறு தவறு நடந்தாலும் சும்மா விட மாட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை | Thoothukudi Mk Stalin Speech

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது எதிர்பாராத ஒன்று. வெற்றியை காண கலைஞர் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவரது சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி.

கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை திமுகவினர் கடைபிடிக்க வேண்டும்.பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.கூட்டணி கட்சிகளை திருப்தி செய்வதற்கு மட்டும் எச்சரிக்கவில்லை,திருந்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.