ஒரே பெண்ணை காதலித்த நண்பர்கள்! காதலிக்காக நண்பனின் தலையை துண்டித்த கொடூரம்!!
தூத்துக்குடி அருகே காதலிக்காக நண்பனின் தலையை துண்டித்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மதன்குமார், பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர், கடந்த மாதம் 30-ம் தேதி காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 17 வயது சிறுவன் ஒருவனும், மதன்குமாரும் ஒன்றாக இணைந்து பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். ஒரு நாள் அந்த 17 வயது சிறுவன் மதன்குமாரின் செல்போனை எடுத்து பார்த்ததில் தான் காதலிக்கும் பெண்ணை, மதன்குமாரும் காதலித்து வந்ததை கண்டுபிடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காதலை கைவிடுமாறு மதன்குமாரிடம் பல முறை கூறியுள்ளார். இதனை மதன்குமார் மறுத்ததால், ஆத்திரத்தில் வா மது அருந்தலாம் என அழைத்து சென்று, அவர் தலையை துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கொலை செய்த 17 வயது சிறுவனை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.