தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயம் அடைந்தனர். இன்று அவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
சொல்லமுடியாத துயரமான இந்த நாளில், பலியான 13 பேருக்கும் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மரியாதையும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
5ஆம் ஆண்டு நினைவு தினம்
இதனை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முத்துநகர் கடற்கரையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு போன்ற சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன் அனுமதி பெற்று குமரெட்டியாபுரம், தோமையார் கோயில் தெரு, பூபாலராயர்புரம், முத்தையாபுரம், லயன்ஸ்டவுன், , தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர் ஆகிய பகுதிகள் நடைபெறும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்றைய தினத்தில் மாவட்டத்தில் செயல்படும் 53 டாஸ்மாக் கடைகளும், பார்களையும் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக முத்துநகர் கடற்கரை பூங்கா நேற்று போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது