தாலியைக் கொண்டு வா, தாயத்து செய்யலாம் - போலி சாமியரின் தில்லுமுல்லு

Arrest thoothukudi Fake Preacher
By Thahir Sep 06, 2021 05:22 AM GMT
Report

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (37). இவர், விளாத்திக்குளம் - நாகலாபுரம் சாலையில் 'சக்தி வாராகி' என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்துள்ளார். இவரிடம், விளாத்திக்குளம் அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி தங்க பேச்சியம்மாள் (52), கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்று குறி கேட்டுள்ளார்.

அப்போது சக்தி அந்தப் பெண்ணிடம், "இறந்துபோன உன் கணவரின் ஆன்மா சாந்தி அடையவில்லை, உனது வீட்டை இடித்து மாற்றி அமைத்தால் தான் உன் கணவரின் ஆன்மா சாந்தியடையும், உனது குடும்பப் பிரச்னை தீரும்" என்று கூறியுள்ளார்.

தாலியைக் கொண்டு வா, தாயத்து செய்யலாம் - போலி சாமியரின் தில்லுமுல்லு | Thoothukudi Fake Preacher

அதற்கு, பணம் இல்லை என்று கூறிய அந்த பெண்ணிடமிருந்து 2½ பவுன் தங்கச் செயினை பெற்றுக் கொண்டு ரூ.30ஆயிரம் பணத்தை கொடுத்து வீட்டை இடிக்கச்சொல்லி உள்ளார்.

அந்த பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்துள்ளார். அதன் பின்னும் அவரது குடும்பப் பிரச்னைகள் தீராததால் அப்பெண் மீண்டும் சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்.

அப்போது அவர் அந்த பெண்ணிடம் உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், ரூபாய் 3500 பணத்தையும் கொண்டு வா, அதில் நான் தாயத்து செய்து, பூஜையில் வைத்து தருகிறேன் உனது பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்தப் பெண்ணும் 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர், இதுவரை தாயத்து கொடுக்கவில்லை.

அதை கேட்ட அந்த பெண்ணிடம், உனக்கு செய்வினை வைத்து கை, கால் விளங்காமல் செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் சக்தியை கைது செய்தனர்.