விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்..தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். 20 அக்டோபர் 1986 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து, சில பகுதிகளை பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி சிதம்பரனார் துறைமுகம் பழமை வாய்ந்தது.
இது இந்தியாவின் 12 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமாக உள்ளது. இத்துறைமுகநகரம் மன்னார்வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது.
தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நகரின் தென்பகுதி செம்மண் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. அமைந்துள்ளது.தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர்கள்
இத்தகைய சிறப்பு மிக்க தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஆர்.ஆறுமுகம் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் மாவட்ட ஆட்சியராக 20/10/1986 முதல்23/02/1989 வரை பதவி வகித்தார்.
இதனை தொடர்ந்து எம்.கனகசபாபதி,பி.சிவகாமி,எஸ்.அன்சர்அலி,கே.எம்.சுப்பிரமணியன்,கேமந்த குமார் சின்கா,எ.பன்னீர்செல்வம்,ஆர்.இராஜகோபால். என டாக்டர். கி. செந்தில் ராஜ் வரை சுமார் 26 பேர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளனர்.
லட்சுமிபதி ஐஏஎஸ்
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் 27 வது மாவட்டத்தின் புதிய் ஆட்சியராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். வந்த லட்சுமிபதி செங்கல்பட்டு சப் கலெக்டராக பணியாற்றியவர்.தூத்துக்குடி மாவட்டத்தில் போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டினார்.
தூத்துக்குடியில் கிட்டதட்ட ஓராண்டு காலமாக திறம்பட லட்சுமிபதி ஐ.ஏ.ஏஸ் பணியாற்றினார். இதனையடுத்து தற்போது முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இளம் பகவத் ஐஏஎஸ்
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இளம்பகவத் 2016 ஆண்டு தமிழக கேடர் பிரிவைச் சேர்ந்தவர். இளம்பகவத்தின் சொந்த கிராமம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழகன்குடிகாடு. இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணி கொண்டவர்.
இவருடைய அப்பா கந்தசாமி விவசாயியாக உள்ளார், சோழகன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி ஆவார்.2005 -ம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியும் அவருக்கு அந்த பணி கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து தீவிர முயற்சியாக 2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார்.
அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்று பணியாற்றினார்.அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணி அமர்த்தப்பட்டார். தொடர்ந்து பல்வேறு தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று பல்வேறு பணியில் இருந்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் இளம்பகவத் அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்றார்.இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.