யார் இந்த தர்ம முனீஸ்வரன்? Thoothukudi கொடூரம்; 33 வழக்குகள்

By Fathima Mar 20, 2026 07:47 AM GMT
Report

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 9 நாள் நீண்ட விசாரணைக்கு பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன்(வயது 37) கைது செய்யப்பட்டார்.

ஆயுள் தண்டனை குற்றவாளியான இவர் தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், கடந்த டிசம்பர் 18-ல் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி அவர் தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இதற்காக வந்த போதே மாணவியை துன்புறுத்தி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு