தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் தொல்.திருமாவளன் டுவிட்

thirumavalavan
By Fathima May 02, 2021 03:34 AM GMT
Report

தமிழக தேர்தல் களத்தை சனாதன சக்திகளுக்கு எதிராக திருப்பியதில், விடுதலை சிறுத்தைகளின் பங்கு முதன்மையானது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக தேர்தல்களத்தைச் சனாதன சக்திகளுக்கு எதிராகத் திருப்பியதிலும், தலித் மக்களை பெருவாரியாக அதிமுக-பாஜக அணிக்கு எதிராகத் திரட்டியதிலும் விடுதலைச் சிறுத்தைகளின் பங்கு முதன்மையானது! சனாதனிகளை வீழ்த்துவதும், விரட்டியடிப்பதுமே நமக்கான வெற்றி. அறம் சீறும் . சனாதனம் வீழும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.