“திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும்” - முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை
கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவிவேற்ற நிலையில்,
இன்று மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட மேயர்,நகர் மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இந்த மறைமுக தேர்தலில் பல்வேறு இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளனர்.
அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளர் மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பூந்தமல்லியில் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு
நகராட்சி தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு, வாக்கு பதிவு பாதியிலேயே நிறுத்தபட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கும் போட்டி வேட்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
இதற்கு விடுதலை சிறத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் உத்தரவை மீறி நின்று வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்.
மேலும் கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.