பாஜக-வை மக்கள் நிராகரித்துவிட்டனர்: தொல்.திருமாவளவன்
தமிழ்நாட்டில் அதிமுக- பாஜகவை வீழ்த்துவது என்ற இலக்கில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அண்ணா அறிவாலயத்துக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வருகை தருகின்றனர்.
தொல்.திருமாவளவன், வீரபாண்டியன், சண்முகம், சுதீஷ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், இந்த தேர்தலில் பாஜக-வை மக்கள் நிராகரித்துவிட்டனர், அதிமுக- பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்கில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என தெரிவித்தார்.
மேலும் தவெக முதலில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறவேண்டும் என்றும், தவெகவிற்கு எதிராக நாங்கள் பிரசாரம் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.