விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? தொல். திருமாவளவன்
Thol. Thirumavalavan
By Fathima
தமிழக வெற்றிக்கழகத்துக்கு ஆதரவு அளித்தது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, திமுக தலைமையில் போட்டியிட்டு விசிக 2 இடங்களிலும், இடதுசாரிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம்.
கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம், அரசியல் நெருக்கடி உருவாகியிருக்கும் இச்சூழலில் நாங்கள் தொலைநோக்கு பார்வையோடு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவை எடுத்துள்ளோம்.
விஜய் ஆட்சி அமைப்பதற்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகவும், குடியரசு ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
சூரியன் புதன் இணைவால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்... டபுள் ஜாக்பாட் பெறும் டாப் 3 ராசிகள்! Manithan