தேர்தலில் போட்டியிடவில்லை: தொல். திருமாவளவன்
Thol. Thirumavalavan
By Fathima
சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக கூறிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தற்போது போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “யுக்தியில் மாற்றம் செய்கிறேன்” என கூறியதுடன், தொங்கு சட்டசபை உருவாகும் என்ற சந்தேகத்தை முன்னிட்டே போட்டியிடுவதாக கூறிய கருத்து முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.
இந்நிலையில் அரசியல் யுக்தியில் மாற்றம் கொண்டுள்ளதாகவும், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய சூழலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அத்தொகுதியில் மறைந்த தலைவர் இளைய பெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.