பிக் பாஸ் சீசன் 8; இந்த வாரம் டபுள் எலிமினேஷன்? யார் அந்த நபர்கள் தெரியுமா?
இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பாரப்பாகும் பிக் பஸ் 8 வது சீசன் நடைபெற்று வருகிறது. நடிகர் கமலா ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழச்சியை, அவர் விலகிய பிறகு நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரமே 49 நாட்கள் ஆன நிலையில், இன்னும் ஐம்பது நாட்கள்தான் உள்ளது. ஆனால் போட்டியாளர்கள் உள்ளே மட்டும் 18 பேர் உள்ளார்கள். இப்படியான நிலையில்,
யார் இந்த வீட்டில் இருந்து வரும் வாரங்களில் வெளியேறப்போகின்றார்கள் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. குறிப்பாக ரசிகர்கள் மத்தியில், டபுள் எவிக்ஷன் உள்ளதா என்ற கேள்வி இருந்து வந்தது.
அந்த வகையில் இந்த வாரம் அதாவது 8வது வாரத்தில் எலிமினேஷனுக்காக மொத்தம் 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஜாக்குலின், அன்ஷிதா, ரயான், மஞ்சரி, ஷிவ்குமார், விஷால், சத்யா,
அந்த நபர்கள்
ரஞ்சித், ஆனந்தி, சாச்சனா என மொத்தம் 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் சனிக்கிழமை அதாவது இன்று, ஒரு போட்டியாளரும்,
நாளை மற்றொரு போட்டியாளரும் எலிமினேட் செய்ய பிக்பாஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த வகையில்,
இன்று போட்டியாளர் சாச்சனா எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நாளை ஆனந்தி எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.