விராட் கோலியை விட இவர் தான் அதிகமாக சம்பாதிக்கிறார் - யார் அந்த வீரர்?
இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை வீரர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சம்பளம் விவாதப் பொருளாகியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைக் காட்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அதிகமாக சம்பாதிக்கிறார் என அவர் தெரிவித்துள்ள்ளார்.

‘கோலியை விட ஜோ ரூட் அதிகமாக சம்பாதிக்கிறார். அதுவும் தனது தேசிய அணிக்காக மட்டுமே அவர் விளையாடுகிறார்.கோலி ஆண்டு வருமானமாக 7 கோடி ரூபாயும், ஜோ ரூட் 9.8 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டுகிறார்” என்றார்.
ஆனால் தேசிய அணிக்கு விளையாடி பெறும் சம்பளம் மட்டுமே இதில் அடங்கும். விளம்பரங்கள் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றைக் கணக்கில் வைத்துப் பார்த்தால் கோலியின் சம்பளமே அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil