நல்லா எழுதி வச்சுக்கங்க - பாகிஸ்தானை வச்சு செய்ய போகும் வீரர் இவர் தான்; அடித்து சொல்லும் ஹைடன்

Matthew Hayden Pakistan national cricket team said
By Anupriyamkumaresan Oct 23, 2021 09:18 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

பாகிஸ்தான் அணிக்கு கே.எல் ராகுல் நிச்சயம் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளின் கனவாக இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.

இதில் தனது முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை சந்தித்த இந்திய அணி, இரண்டாவது பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு இரண்டிலும் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தனது முதல் போட்டியில் பரம எதிரியாக பாவிக்கப்பட்டு வரும் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. 

நல்லா எழுதி வச்சுக்கங்க - பாகிஸ்தானை வச்சு செய்ய போகும் வீரர் இவர் தான்; அடித்து சொல்லும் ஹைடன் | This Player Can Win The Pakistan Hyden Said

 டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வரும் முன்னாள் வீரர்கள் பலர், இந்திய அணிக்கான தங்களது ஆலோசனையையும் வழங்குவதோடு, டி.20 உலகக்கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்கள் மற்றும் கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான தனது ஆடும் லெவனையும் முன்னாள் வீரர்கள் பலர் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி குறித்து பேசி வரும் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மேத்யூ ஹைடன், கே.எல் ராகுல் பாகிஸ்தான் அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என தெரிவித்துள்ளார். இது குறித்து மேத்யூ ஹைடன் பேசுகையில், “கேஎல் ராகுல் தான் பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

நல்லா எழுதி வச்சுக்கங்க - பாகிஸ்தானை வச்சு செய்ய போகும் வீரர் இவர் தான்; அடித்து சொல்லும் ஹைடன் | This Player Can Win The Pakistan Hyden Said

கே.எல். ராகுலை சிறுவயதிலிருந்து பார்த்துவருகிறேன். அவரது போராட்டங்கள் முதல் டி20 கிரிக்கெட்டில் அவர் ஆதிக்கம் செலுத்தியது வரை அவரை பார்த்துவருகிறேன். ரிஷப் பண்ட் அதிரடி வீரர். ஆட்டத்தின் மீதான அவரது பார்வையும், உலகின் பவுலிங் அட்டாக் அனைத்தையும் அடித்து நொறுக்குகிறார் என்று ஹைடன் தெரிவித்தார்.