7 மாதங்களில் 7 கேப்டன்களை இதனால் தான் மாற்றினோம் - சவுரவ் கங்குலி

Rohit Sharma Sourav Ganguly Virat Kohli Indian Cricket Team
1 மாதம் முன்

இந்திய அணியில் 7 மாதங்களில் 7 கேப்டன்கள் மாற்றப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் கொடுத்துள்ளார்.

கேப்டன்கள் தொடர் மாற்றம் 

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியதற்கு பிறகு புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

பின்னர் கேப்டன் பொறுப்பில் இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றி பெற்று வருகிறது.

7 மாதங்களில் 7 கேப்டன்களை இதனால் தான் மாற்றினோம் - சவுரவ் கங்குலி | This Is Why We Changed 7 Captains In 7 Months

கடந்த 7 மாதங்களில் மட்டும் 7 கேப்டன்கள் தலைமையில் இந்திய அணி விளையாடி உள்ளது. ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது ஓய்வு அளிக்கப்பட்டாலோ ரிஷப் பண்ட், ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், பும்ராஹ் என பல வீரர்களுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு வருகிறது.

அடிக்கடி இந்திய அணியில் தொடர்ச்சியாக கேப்டன்களை மாற்றி வருவது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது தான் காரணம் - கங்குலி 

தொடர் கேப்டன்கள் மாற்றம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். ரோஹித் சர்மா தான் அனைத்து ஃபார்மட்டுக்கான இந்திய அணியின் கேப்டன் ஆனால் வீரர்கள் காயங்கள் அடையாமல் அவர்களது ஃபிட்னெஸை பராமரிக்கும் வகையில் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

7 மாதங்களில் 7 கேப்டன்களை இதனால் தான் மாற்றினோம் - சவுரவ் கங்குலி | This Is Why We Changed 7 Captains In 7 Months

இதனால் தான் சுழற்சி முறையில் கேப்டன் பதவி மாற்றப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இளம் வீரர்களை வைத்துக்கொண்டுதான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணி தொடரை வென்றது. இந்திய அணியில் எப்போது வேண்டுமானாலும் களமிறங்க தகுதியான 30 வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.