புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு...இதனால் தான் காலில் விழுந்தாரா ரஜினி?
ரஜினிகாந்த் அண்மையில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த நிலையில், அதற்கு பின்னால் இருக்கும் காரணம் தற்போது இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
ரஜினியின் பயணம்
நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் படம் வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, இமயமலை பயணம் புறப்பட்டு சென்றார். 4 ஆண்டுகள் பிறகு அவர் இமயமலை சென்ற நிலையில், வெளியான ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து வருகின்றது.
இமயமலையில் இருந்து திரும்பிய அவர், வரும் வழியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து உத்திரபிரதேசம் வந்தடைந்த அவர், அம்மாநில துணை முதல்வருடன் ஜெயிலர் படத்தை சமீபத்தில் கண்டு களித்துள்ளார்.
யோகியுடன் மீட்டிங்
இந்நிலையில், உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சென்று சந்தித்த ரஜினிகாந்த் அவரின் காலில் விழுந்தும் ஆசீர்வாதம் பெற்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தன்னை விட வயதில் இளையவரான யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்த நிலையில், பலரும் அது குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
இது தான் காரணம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் யோகி ஆதித்யநாத்தின் காலில் ஏன் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் என்ற காரணம் ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
யோகி உத்திர பிரதேசத்தின் முதல்வர் மட்டுமல்ல, அவர் நாதசைவ சம்பிரதாயத்தை பின்பற்றும் கோரக்நாத் மடத்தின் பீடாதிபதியும் கூட என்பதால் அவரை கண்டால் ஆசிர்வாதம் வேண்டுமென்பது தர்மம் என குறிப்பிட்டு அதன் காரணமாகவே, அதை அப்படியே ரஜினி கடைபிடித்தார் என ஒரு சாரார் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.