தோல்விக்கு இது தான் காரணம் வருதத்துடன் பேசிய ரோகித் சர்மா - கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
சென்னையில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா வீரர்கள்
நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர்.
அதிகபட்சமாக மார்ஷ் 47 ரன்கள், அலெக்ஸ் கேரி 38 ரன்கள்,டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழக்கக 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ரன் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா
270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 65 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
பின்னர் ரோகித் சர்மா 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதே போன்று சுப்மன் கில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழுந்தார்.
பின்னர் களம் இறங்கிய விராட் கோலி 54 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். கே.எல்.ராகுல் 32 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் 49.1 ஓவரில் இந்திய அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2019 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக சொந்த மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்கு இது தான் காரணம் ரோகித் சர்மா வேதனை
பின்னர் தோல்வி குறித்து வருத்தத்துடன் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா அணி எடுத்த ரன்னை எங்களால் எட்டமுடியவில்லை என்று அர்த்தம் இல்லை.
நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. சிறப்பான துவக்கம் கிடைத்த பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்து பார்டனர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம்.
இது தான் தோல்விக்கு முக்கிய காரணம். இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி ஒட்டுமொத்த அணியும் நன்றாக செயல்படவில்லை என்பதற்கான தோல்வியாகும்.
இந்த தொடரில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். மேலும் எந்த இடத்தில் தவறு நடந்தது என்று ஆய்வு செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியா வீரர்கள் அபாரமாக செயல்பட்டார்கள் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.