தோல்விக்கு இது தான் காரணம்...வேதனையில் ஹர்திக் பாண்டியா..!

Hardik Pandya Gujarat Titans IPL 2022
By Thahir May 07, 2022 04:21 PM GMT
Report

நேற்றைய ஐபிஎல் போட்டியின் குஜராத் அணியும்,மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 15 வது ஐபிஎல் போட்டியின் 51 லீக் போட்டி மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த முப்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக இஷான் கிஷன் 45 ரன்களும்,டிம் டேவிட் 44 ரன்களும் எடுத்திருந்தனர். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடியது.

தொடக்க வீரர்களான சஹா 55 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்து கொடுத்தனர். குஜராத் அணியின் துவக்கம் சிறப்பாக இருந்தாலும் அதை தொடர்ந்து களம் இறங்கிய பேட்ஸ்மேன்களால் தாக்குபிடிக்க முடியாமல் திணறினர்.

6 பந்துகளில் 9 ரன்கள் தேவை இருந்த நிலையில் டேனியல் சம்ஸ் தனது சிறப்பான பந்துவீச்சின் காரணமாக வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து தனது மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதையடுத்து 6 பந்துகளில் 9 ரன்கள் எடுக்காமல் தோல்வியை தழுவியது குஜராத் அணி இந்த தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இக்கட்டாண நேரத்தில் இரண்டு ரன் அவுட்கள் ஆனாதே தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டது என்று வேதனை தெரிவித்தார்.

டி.20 போட்டிகளில் ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியமானது,விக்கெட்டுகளை இழப்பது போட்டியை முழுவதுமாக மாற்றிவிடும்.

நாங்கள் இந்த போட்டியில் சிறப்பதாக விளையாடினோம்,ஆனால் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது போட்டியே மாற்றிவிட்டது.

ஒரு கட்டத்தில் மும்பை அணி 200 ரன்களை தாண்டிவிடும் என்று நினைத்தேன். ஆனால் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணியை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.

தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்றார்.