சென்னை அணியின் தோல்விக்கு இது தான் காரணம் - ஆத்திரத்தில் ரசிகர்கள்..முன்னாள் வீரர் கருத்து..!

MS Dhoni Chennai Super Kings TATA IPL
By Thahir May 10, 2022 11:45 PM GMT
Report

டெவன் கான்வேவை சரியாக பயன்படுத்தாதே சென்னை அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற டாடா ஐபிஎல் போட்டியில் 15 வது லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ஜடேஜா தலைமையில் கீழ் விளையாடிய 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் தோல்விக்கு இது தான் காரணம் - ஆத்திரத்தில் ரசிகர்கள்..முன்னாள் வீரர் கருத்து..! | This Is The Reason For The Defeat The Chennai Team

கடந்த கால தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்த சென்னை அணி நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் பீல்டிங்கில் மோசமாக விளையாடியதால் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டது.

சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

அதற்கு காரணம் அவருக்கு அளிக்கப்பட்ட கேப்டன் பதவி தான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து சென்னை அணியின் கேப்டன் பதவி மீண்டும் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தோனி பொறுப்பேற்ற பிறகு மூன்று போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் தோல்விக்கு இது தான் காரணம் - ஆத்திரத்தில் ரசிகர்கள்..முன்னாள் வீரர் கருத்து..! | This Is The Reason For The Defeat The Chennai Team

மூன்று போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற டெவன் கான்வே மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் டெவன் கான்வே இருந்திருந்தால் சென்னை பல போட்டிகளில் தோல்வி அடைந்திருக்காது என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

சென்னை அணியின் தோல்விக்கு இது தான் காரணம் - ஆத்திரத்தில் ரசிகர்கள்..முன்னாள் வீரர் கருத்து..! | This Is The Reason For The Defeat The Chennai Team

இது குறித்து பேசிய அவர்,“தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றிருப்பது சென்னை அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் போடுவதற்காக தோனி களத்திற்குள் வருவதில் இருந்தே சென்னை அணியின் மாற்றம் தெளிவாக தெரிகிறது.

தோனியின் கேப்டன்சியை நிச்சயம் சென்னை அணி மிஸ் செய்திருக்கும். அதே போல் ஒரு போட்டியில் சொதப்பியதன் காரணமாக டெவன் கான்வேவை ஆடும் லெவனில் இருந்து நீக்கியிருக்க கூடாது.

டெவன் கான்வே சரியாக பயன்படுத்திருந்தால் நிச்சயம் சென்னை அணி இத்தனை போட்டிகளில் தோல்வியடைந்திருக்காது” என்று தெரிவித்தார்.