"இது கொஞ்சம் கூட நல்லா இல்ல குஷ்பூ மேம்” - ரசிகர்களை டென்ஷனாக்கிய போட்டோ

BJP actresskhushbu
By Petchi Avudaiappan Nov 26, 2021 06:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் இரண்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பிரபல நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான நடிகை குஷ்பூ என்றாலே அவரது பூசிய உடற்தோற்றமும், அழகிய சிரிப்பும் தான் அனைவரது நினைவுக்கும் வரும். 

பொதுவாக உடல் எடை கூடியவர்கள் தங்களை நினைத்து வருந்தும் நிலையில் குஷ்பூ இத்தனை ஆண்டு காலம் தனது வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதராகவே வலம் வருகிறார்.

இதனிடையே நீண்ட நாட்களுக்குப் பின் அவர் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். மேலும் ஒர்க் அவுட் செய்து தனது உடல் எடையைக் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு  காலை வணக்கம் சொல்ல இரண்டு செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார். அதனைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அவரை விமர்சித்துள்ளனர். 

ஒருவர் இது கொஞ்சம் கூட நல்லா இல்ல குஷ்பு அக்கா. நீங்கள் பூசினாற் போன்று இருந்தது தான் எங்களுக்கு பிடிக்கும். தயவு செய்து பழையபடி மாறுங்கள் என தெரிவித்துள்ளார். 

மற்றொருவர் குஷ்பு அக்கா நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே போகிறார். அவந்திகா, அனந்திதாவின் அக்கா மாதிரி ஆகிவிட்டார். அழகாக இருக்கிறீர்கள், இருந்தாலும் பழைய குஷ்பு தான் டக்கர் என தெரிவித்துள்ளார்.