இலங்கை வர கோட்டாபயவுக்கு இது உகந்த நேரமல்ல : ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அந்த நாடு மக்களின் போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது.
நெருக்கடியில் இலங்கை
இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இலங்கையின்முந்தைய அதிபர் கோட்ட்பய ராஜபக்சே நாட்டை விட்டு சிங்கப்பூர் தப்பி சென்ற நிலையில் கோட்டாபய ராஜபக்சே மீண்டும் இலங்கை வர உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கோட்டாபய நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் அவர் கூறியுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை வரும் கோட்டபய
அதில் கோட்டபய திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை, என்றும் அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை என ரணில் கூறியதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் காரணமாக வெடித்த மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி கோட்டாபய ராஜபக்சே நாட்டிவிட்டு ஜூலை 13 ஆம் தேதி தப்பியோடி தனது பதவியினை துறந்தது குறிப்பிடத்தக்கது.