இதான் என்னோட கடைசி மேட்ச் : அதிர்ச்சி கொடுத்த ராயுடு

TATA IPL IPL 2022
2 நாட்கள் முன்

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அம்பாதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பாதி ராயுடு (வயது 36) அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்பாதி ராயுடு, இது எனது கடைசி ஐபிஎல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது.

இந்த அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு எனது மனப்பூர்வமாக நன்றியை சொல்ல விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

அம்பதி ராயுடுவின் இந்த ஒய்வு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான அம்பாதி ராயுடு, 2017 வரை விளையாடினார். பின்னர் 2018 மெகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸால் ரூ.6.75 கோடிக்கு அம்பாதி ராயுடுவை வாங்கியது.

இதான் என்னோட கடைசி மேட்ச் : அதிர்ச்சி கொடுத்த ராயுடு

ஐபிஎல்லில் அவரது சாதனையைப் பொறுத்தவரை, ராயுடு பல ஆண்டுகளாக மிகவும் நிலையான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் லீக்கில் மொத்தம் 187 போட்டிகளில் விளையாடி 29.28 சராசரியில் 4187 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த ஆண்டும் கூட, சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் ராயுடுவும் ஒருவர் என்பது குறிப்பிடப்படுகிறது. பிளேஆஃப் சுற்றில் இருந்து அந்த சென்னை அணி ஏற்கனவே வெளியேறினாலும், ராயுடுவின் முயற்சிகள் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

 இந்த நிலையில் தான் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராயுடு தனது ட்விட்டர் பதிவை, திடீரென நீக்கியுள்ளார்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.