இது பெரும் பேரிடர் - நாளை தென்தமிழகம் செல்கிறேன் - முதல்வர் முக ஸ்டாலின்..!!

M K Stalin Tamil nadu DMK Tirunelveli
By Karthick Dec 19, 2023 07:03 AM GMT
Report

வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட நாளை தென்தமிழகம் செல்லவுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் செய்தியாளர் சந்திப்பு

வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதால் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தென்தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

this-is-a-big-disaster-says-tn-cm-mkstalin 

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின், டெல்லி தமிழக மாளிகையில் இருந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாடு அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பெருமளவுபாதிப்பும், சேதமும் தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிட்டு, புயல் ஓய்ந்த மறுநாளே சென்னையில் போக்குவரத்து சீரானது என்றும் சுட்டிக்காட்டினார்.

this-is-a-big-disaster-says-tn-cm-mkstalin

தொடர்ந்து பேசிய அவர், தற்போது தென் மாவட்டங்களில் மழையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி, வானிலை மையம் தெரிவித்ததை விடவும் அதிகமாக மழை பெய்துள்ளது என்றும் தெளிவுபடுத்தினார்.

நாளை தென்மாவட்டங்களுக்கு செல்கிறேன்

மேலும், மத்திய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர் என்ற தகவலை கூறி, இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம் என்று தெரிவித்தார். மத்திய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை மாநில அரசு அறிவித்தது என்று கூறி மத்திய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் இல்லை - அமைச்சர் இயக்குனரோடு இருக்கின்றார் - அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

முதல்வர் இல்லை - அமைச்சர் இயக்குனரோடு இருக்கின்றார் - அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

மேலும், பிரதமர் மோடியை சந்தித்து மிச்சாங் புயல் நிவாரணத்தோடு, தென் மாவட்ட பாதிப்புக்கு நிவாரணம் கோர உள்ளதாக தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது என்றும் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள் என்று கூறினார்.

this-is-a-big-disaster-says-tn-cm-mkstalin

தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தகவல் அளித்து, மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென்மாவட்டங்களுக்கு செல்கிறேன் என்றார்.