3 வீடுகள் மற்றும் கார்… வட்டிக்கு பணம் கொடுக்கும் கோடீஸ்வர பிச்சைக்காரர்!
இந்தூர் மாகாணத்தின் சராஃபா பகுதியில் பிச்சையெடுத்த மாற்றுத்திறனாளி ஒருவரை மீட்புக் குழுவினர் விசாரித்தபோது, அவர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி என்பது தெரியவந்துள்ளது. குறித்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாங்கி லால் என்ற அந்த நபர் பல ஆண்டுகளாக மரத்திலான தள்ளுவண்டி மற்றும் கைகளை ஊன்றி வீதிகளில் பிச்சையெடுத்து வந்துள்ள நிலையில்,சமீபத்தில் மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்திய பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையால் இவரது பின்னணி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

இவரது பரிதாப நிலையைக் கண்டு அரசு சார்பில் ஏற்கனவே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இவருக்கு சொந்தமாக மூன்று வீடுகள் மற்றும் மூன்று ஆட்டோக்கள் இருப்பதுடன் ஒரு விலையுயர்ந்த கார் வைத்திருப்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும் இவர் தினசரி ஐந்நூறு ரூபாய் வரை பிச்சையாகப் பெறுவதுடன் அந்தப் பகுதியில் உள்ள பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.