சொன்னீங்களே செஞ்சீங்களா? இது விடியா அரசு : ஈபிஎஸ் ட்வீட்

admk dmk cmstalin epstweet
By Irumporai Feb 13, 2022 09:35 AM GMT
Report

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சொன்னீங்களே_செஞ்சீங்களா? என ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக மற்றும் அதிமுக ஒருவரையொருவர் மாற்றி, மாற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை #சொன்னீங்களே_செஞ்சீங்களா?,

அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி சொன்னீங்களே செஞ்சீங்களா? 

ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து சொன்னீங்களேசெஞ்சீங்களா?, பொய் பேசுவதையும், போலி விளம்பரம் செய்வதை மட்டும் சொல்லாமலே செய்கிறது இந்த விடியாஅரசு.’ என பதிவிட்டுள்ளார்.