‘’நீங்க இப்படி ஆடுனாதான் கப் அடிக்க முடியும் , என தோனி அப்பவே எனக்கு சொல்லி கொடுத்தார் ‘’ - மனம் திறந்த ஷாரூக்கான்

போட்டியில் இவ்வாறு செய்தால்  வெற்றி வாகை சூட முடியும் என தோனி தனக்கு ஆலோசனை கூறியதாக தமிழ்நாடு அணி வீரர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு  முன்பு  நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டியில் கர்நாடகவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி.

அதிரடியாக விளையாடிய தமிழ்நாடு அணி வீரர் ஷாருக்கான், 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். இறுதி பந்து வரை ஆட்டத்தை எடுத்து சென்று வெற்றிவகை சூட காரணமாக  இருந்துள்ளார்.

இந்த நிலையில் , இந்த நிலையில், அன்று நடைபெற்ற  இறுதிப் போட்டியில் பதட்டமின்றி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொடுக்க  இந்திய அணியின் முன்னாள்கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கு கொடுத்த ஆலோசனைகள் கொடுத்தாக  ஷாருக் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு ஃபினிஷரின் ரோல் என்ன என்பதை எனக்கு தெளிவாக விளக்கி இருந்தார் தோனி. களத்தில் நாம் செய்வதுதான் சரி என என்னை நம்புமாறு சொல்லி இருந்தார்.

ஏனென்றால் அந்த சூழலில் ஆட்டத்தின் போக்கை சரியாக கணித்திருப்பவர் நீங்கள் தான். மேலும் இலக்கை விரட்டும் போது நம் மூளைக்குள் என்ன ஓடுகிறது என்பது நமக்கு மட்டும்தான் தெரியும் எனவும் தோனி சொன்னார்” என தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.

2021 ஐபிஎல் சீசனில் ஷாருக்கான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். விரைவில் நடைபெற உள்ள மெகா ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப் போட்டியில் ஷாருக்கான் விளையாடியதை டிவி மூலம் பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்