இந்த பழம் மட்டும் சாப்பிடாதீங்க உயிரே போயிடும் - என்ன பழம் தெரியுமா?

Papaya
By Thahir May 15, 2022 11:39 PM GMT
Thahir

Thahir

in உணவு
Report

பப்பாளி பழம் சில நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது. பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம்.

இந்த பழத்தில் ஏ, சி, பி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன; பழங்களிலேயே எளிதில் செரிமானமாகக்கூடிய மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டது பப்பாளி.

இந்த பழம் மட்டும் சாப்பிடாதீங்க உயிரே போயிடும் - என்ன பழம் தெரியுமா? | This Fruit Alone Will Leave You Lifeless To Eat

இது பலருக்கும் மிகவும் விருப்பமான பழமும் கூட. இருப்பினும் பப்பாளியை ஒரு சிலர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.தற்போது பப்பாளியை யாரொல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆஸ்துமா 

ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் சுவாச பிரச்சனை இருந்தால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பப்பாளி பழத்தை சாப்பிடாதீர்கள்.

ஏனெனில் பப்பாளியில் பாப்பைன் உள்ளது. இது இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு அழற்சியை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.

கர்ப்பிணிகள்

பப்பாளி கருப்பையில் உள்ள கருவிற்கு தீங்கு விளைவிக்கும். முக்கியமாக பப்பாளி கருச்சிதைவை கூட ஏற்படுத்தும். ஆகவே இப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை உள்ள நோயாளிகள் பப்பாளியை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பாப்பைன் மற்றும் பீட்டா கரோட்டின் மஞ்சள் காமாலையை அதிகரிக்கும்.

அறுவை சிகிச்சை நோயாளிகள்

அறுவை சிகிச்சை செய்தவர்கள் சில வாரங்களுக்கு பப்பாளியை பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை சாப்பிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயம் விரைவில் ஆறாமல் பாடாய் படுத்திவிடும்.

இதய நோய்

இதய நோய் உள்ளவர்கள் பப்பாளி பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகளவு பப்பாளியை சாப்பிட்டால், அது இதயத் துடிப்பைக் குறைத்து, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்.

பப்பாளியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்புகள் போன்றவற்றை உண்டாக்கும்.