5 குழந்தைகளுடன் 5 நாட்கள் உணவு இல்லாமல் பசியில் தவித்த பெண்

Hungry Uttarpradesh
By Petchi Avudaiappan Jun 18, 2021 12:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 உத்தரப்பிரதேசத்தில் 5 குழந்தைகளுடன் 5 நாட்கள் உணவு இல்லாமல் பசியில் பெண் ஒருவர் தவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் குட்டி என்பவரது கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

குட்டியும் அவரது மூத்த மகனும் கட்டட வேலைக்கு சென்று வாழ்ந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களின் வேலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவுக்கே வழியில்லாமல் அக்கம்பக்கத்தினரிடம், உறவினரிடம் உணவு பெற்று வந்துள்ளனர்.

ஆனால் அதுவும் சரிவர கிடைக்காததால் கடந்த 5 நாட்களாக குட்டியும் அவரது 5 குழந்தைகளும் உணவே இல்லாமல் பசியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையறிந்த தன்னார்வலர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திர பூஷண் சிங் ஒரு குழுவை அமைத்து அந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளித்துள்ளார்.