குடும்ப அரசியலுக்கும் - நல்லாட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல் - அண்ணாமலை..!
வரும் நாடாளுமன்ற தேர்தல் குடும்ப அரசியலுக்கும் நேர்மையான அரசியலுக்கும் இடையே நடப்பதாகும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
போட்டி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளபதிவில், இன்று நமது என்மன்என்மக்கள் பாதயாத்திரையில் குறிஞ்சிப்பாடி மக்களின் அமோக பங்கேற்பு நமது மாண்புமிகு பிரதமரின் வெற்றியை நிலைநாட்டுகிறது.
நரேந்திர மோடியின் அரசாங்கம் மற்றும் நமது மாண்புமிகு பிரதமருக்கு வலுவான ஆதரவை வலுப்படுத்துகிறது.
The overwhelming participation by the people of Kurinjipadi today in our #EnMannEnMakkal Padayatra establishes the successes of our Hon PM Thiru @narendramodi avl’s govt & reinforces the strong support for our Hon PM.
— K.Annamalai (@annamalai_k) January 26, 2024
இன்றைய மாலை #EnMannEnMakkal பயணம், சுமார் 2,500 ஆண்டுகள்… pic.twitter.com/SZibWuDTv5
இன்றைய மாலை #EnMannEnMakkal பயணம், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான, தமிழகத்தின் தொன்மையான பகுதிகளின் ஒன்றான கடலூர் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில், அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி, தன்னெழுச்சியாகத் திரண்டு வந்த பொதுமக்கள் ஆதரவால் சிறப்புற்றது.
வரும் பாராளுமன்றத் தேர்தல், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான நல்லாட்சிக்கும், திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணியின் குடும்ப, ஊழல் அரசியலுக்கும் இடையே நடக்கவிருக்கும் தேர்தல் என்பதை,
பொதுமக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என பதிவிட்டுள்ளார்.