உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் பக்தர்கள் பக்தி பரவசம்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் தேர்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் ஆகும். சுமார் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர், திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும்.
பக்தர்கள் பரவசம்
ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாக இருக்கும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு தொடங்கியது.
ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்தத் தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார்.
இந்தத் தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், ஐந்து டன் பனை மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறைவனை வழிபட்டனர்.