திருவாரூரில் ஊரே பாராட்டும் வகையில் வெற்றி பெற்ற கணவன்-மனைவி
திருவாரூர் நகராட்சியில் கணவன் மனைவி வேட்பு மனுதாக்கல் செய்ததோடு வெற்றி பெற்றும் அசத்தியுள்ளனர்.
திருவாரூர் நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் மற்றும் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவராக உள்ள கலியபெருமாள் 1வது வார்டிலும்
அவரது மனைவி மலர்விழி 2வது வார்டிலும் போட்டியிட்டு இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கலியபெருமாள் கடந்த 24 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஒரு முறை நகர் மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
திருவாரூர் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வி சார்பில் போட்டியிட தம்பதியினர் வேட்பு மனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில்
தற்போது இருவரும் வெற்றி பெற்றுள்ளனதை அதிமுகவினர் மட்டும் அல்லாது பலரும் வாழ்த்தி வருகின்றனர்.