1,330 தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை - எங்கு தெரியுமா..?
தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் .
திருவள்ளுவர் சிலை
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை நுழைவாயிலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 டன் எடையும் கொண்டது. திருவள்ளுவரின் 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
திறந்து வைப்பு
அதில் 247 எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட்டுள்ளது. சிலையின் முன்பு திருவள்ளுவரின் முதல் குறளான 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என எழுதப்பட்டுள்ளது.
இந்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக வைக்கிறார். மேலும், கோவை மாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.