திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை!

Department of Meteorology TN Weather Thiruvallur
By Thahir Nov 14, 2023 04:45 PM GMT
Report

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மாலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இது நாளை காலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

பள்ளி, கல்லுாரிகளுக்கு  விடுமுறை

பின்னர், அது வடக்கு-வடகிழக்கு திசையில் மீண்டும் வளைந்து நவம்பர் 17 அன்று ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்க கடலை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை! | Thiruvallur Schools And Colleges Tomorrow Holiday

திருவள்ளூரில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை (15.11.2023) விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.