சமத்துவ பொங்கல் விழா - ஊழியர்களுடன் குத்தாட்டம் போட்ட மாவட்ட ஆட்சியர்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சமத்துவ பொங்கல்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கிராமிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் ஒவ்வொரு துறையை சேர்ந்த அலுவலக பெண் ஊழியர்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்தும், விதவிதமான வண்ண கோலமிட்டும் அசத்தினர்.
அதோடு தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து மற்றும் கலை நிகழ்ச்சிகள் மேளதாளங்களுடன் நடைபெற்றது.
ஆட்சியர் நடனம்
மேலும், லெமன் ஸ்பூன், சாக்குப்போட்டி, உறியடி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஊழியர்களுடன் உற்சாககமாக நடனமாடி அசத்தினார்.
பின்னர் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டார். இது அங்கிருந்த ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.