7 வயது சிறுவனை ஒரே நேரத்தில் கடித்த 2 பாம்புகள் - திருத்தணியில் பரபரப்பு
திருத்தணியில் 7 வயது சிறுவனை ஒரே நேரத்தில் 2 பாம்புகள் கடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
7 வயது சிறுவனை ஒரே நேரத்தில் கடித்த 2 பாம்புகள்
திருத்தணி, தும்பிக்குளம் பகுதியில் பூந்தோட்ட கூடாரத்தில் 7 வயது சிறுவன் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது, அங்கு வந்த கட்டுவிரியன் பாம்பும், கண்ணாடி விரியன் பாம்பும் ஒரே நேரத்தில் அச்சிறுவனை கடித்துள்ளது.
அப்போது, சிறுவன் வலியால் கதறி துடித்து கத்தி அலறினான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து, 2 பாம்புகளையும் அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். 7 வயது சிறுவனை ஒரே நேரத்தில் 2 பாம்புகள் கடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.