மதப் பிரச்சினைகளால் சூடுபிடித்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி – நேரடியாக மோதவுள்ள திராவிட கட்சிகள்
மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த முறை திமுகவே நேரடியாக களமிறங்கி போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றத்தை “சிக்கந்தர் மலை” என அழைக்கும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது.
மேலும், பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள முருகன் வழிப்பாட்டு தலத்தை அரசியல் லாபம், பிரிவினை வாதம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து திமுக செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி திருப்பரங்குன்றம் மலை மேல் தீப தூணில் கார்த்திகை அன்று தீபம் ஏற்றுவோம் என்று முதலாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானதாக, திருப்பரங்குன்றம் மலை மேல் தீப தூணில் கார்த்திகை அன்று தீபம் ஏற்றுவோம் என்று முதலாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல், திமுகவே நேரடியாக களமிறங்கி தங்களின் வலிமையை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராஜன் செல்லப்பா, திமுக கூட்டணியில் சிபிஐ (எம்) சார்பில் போட்டியிட்ட எஸ்.கே. பொன்னுத்தாயை தோற்கடித்து எளிதாக சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அஇஅதிமுக அமைப்புச் செயலாளராகவும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ராஜன் செல்லப்பா மீண்டும் போட்டியிட தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
2019 இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் சரவணன், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். இவரும் திருப்பரங்குன்றம் தொகுதியை கேட்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருப்பரங்குன்ற மலை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதையடுத்து, திருப்பரங்குன்றம் தொகுதியை பாஜக உறுதியாக கேட்கும் என்று கூறுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கிருத்திகை தங்கபாண்டியன், போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக, பல பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி வகுப்புகள் வழங்கியுள்ளார்.
மேலும், இவரின் கணவர் தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளராக உள்ளார். மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன்க்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு நெருக்கமானவராக என்று சொல்லப்படுகிறது. திமுக தனது வேட்பாளரை நேரடியாக இறக்கி போட்டியிட்டிருந்தால் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று மதுரை திமுகவினர் சொல்கின்றனர்.
எனவே, இம்முறை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது வேட்பாளரை நேரடியாக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று மதுரை திமுகவினர் சொல்கின்றனர். எனவே, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்கா அரசின் மற்றுமொரு கொடூர பக்கம்: சர்வதேசத்திற்கு விற்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்கள் IBC Tamil
